vegetables and their benefits

ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கைக்கு நாம் அதிகமாக காய் கறிகள் சாப்பிட வேண்டும். காய்கறிகள் என்பது வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் நிறைந்த கலவை ஆகும். இது உங்கள் உடம்பின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். பச்சைக் காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் இரண்டுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். இவற்றின் நன்மைகளைப் பற்றி காண்போம்.

காய்கறிகள், அவற்றின் சத்துக்கள் மற்றும் உடலுக்கு அவற்றால் ஏற்படும் நன்மைகள்:

காய்கறிகளில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ஆகியவை உள்ளன.அவை நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, செரிமானத்திற்குத் தேவையான நார்ச்சத்துக்கள்,நீர்ச்சத்துக்கள் ஆகியவற்றை நமக்கு அளிக்கின்றன.பொதுவாக நம்மிடையே புழக்கத்தில் உள்ள காய்கறிகளை இலைக் காய்கறிகள், பூக்காய் கறிகள், தணடுக் காய்கறிகள், காய்கள், கிழங்கு வகைகள்,விதை வகைகள் எனப் பிரிக்கலாம்.

 

காய்கறிகளைப் பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் :

 

நாள் தோறும் வெவ்வேறு வகையான காய்கறிகள் சமைக்க வேண்டும். காய்கறிகளை அதிக வெப்பத்தில் சமைக்காமல் மிதமான வெப்பத்தில் சமைக்க வேண்டும். காய் கறிகளை நன்கு கழுவிய பின் வெட்டி சமைக்க வேண்டும். வெட்டிய பிறகு கழுவினால் காய்கறிகளில் உள்ள நீரில் கரையும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கழுவும் நீருடன் சேர்ந்து வீணாகிவிடும். புளிப்பு சுவை கொண்ட உணவு வகைகளுடன் சேர்த்து காய்கறிகளை கலந்து சாப்பிட வேண்டும்.

 

தினமும் நாம் உண்ணும் உணவில் ஒரு வகை காயை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்:

 

  • காய்கறிகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் உள்ள நாள்பட்ட நோயைக் குணப்படுத்துகிறது.
  • காய்கறிகளில் குறைந்த அளவு கலோரியும் , அதிகமான நீர்ச்சத்தும்,நார்ச்சத்தும் இருப்பதால் உடல் குறைக்கவும், இருக்கும் எடையை உயராமல் வைத்து இருக்கவும் பயன்படுகிறது.
  • காய்கறிகளில் உள்ள தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கின்றன. காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
  • உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பேணுகிறது.
  • காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியம் பாதுகாப்பு மற்றும் இரத்த அழுத்தம் சீர் செய்தல் ஆகிய பணிகளைச் செய்து உடலைக் காக்கிறது.
  • காய்கறிகளில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக் குறைபாட்டை நீக்க உதவுகிறது.
  • காய்கறிகளில் உள்ள வைட்டமின்களும் தாது உப்புகளும் தோல் ஆரோக்கியத்தைப் பேணி நல்ல மென்மையான பளபளப்பான சருமத்தைப் தருகிறது.

காய்:

முருங்கைக் காய்

 

சத்துக்கள்:

வைட்டமின்கள் -ஏ,சி,இ,பி

தாதுக்கள் -கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ்.

நன்மைகள்:

  1. வைட்டமின் சி நோய் உடலுக்கு எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.
  2. முருங்கைக் காயிலுள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது.
  3. இரும்புச் சத்து இரத்த சோகையை நீக்க உதவுகிறது.
  4. முருங்கைக் காய் ஆஸ்துமாவைக் குறைக்க உதவுகிறது.
  5. இரத்த அழுத்தத்தைப் பேணுகிறது. சர்க்கரை அளவு, கொலஸ்டிரால் அளவு ஆகியவற்றைக் குறைத்து இதயத்தைக் காக்கிறது.இரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது.
  6. கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் தேவையான சத்துக்களைக் கொண்டுள்ளது.

காய்:

அவரைக் காய்

சத்துக்கள்:

வைட்டமின்கள் சி மற்றும் பி.

தாதுக்கள்: கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மக்னீசியம், மாங்கனீசு.புரதம், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்.

நன்மைகள்:

  1. கரையக் கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தைக் காக்கிறது.
  2. வைட்டமின் பி இதய நோயாளிகளிலிருந்தும்,பக்கவாதத்திலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.
  3. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
  4. துத்தநாகம் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
  5. வைட்டமின் சி, மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
  6. நார்ச்சத்து செரிமானத்திற்கும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது.

கத்தரிக்காய்:

கேன்சர் வராமல் தடுக்க உதவுகிறது.

வெண்டைக்காய்:

எடை குறைப்பிற்கு உதவுகிறது.

பூசணிக்காய்:

  • வெள்ளைப் பூசணியானது கட்டிகள் வளர்வதை தடுத்து நிறுத்தும் ஆன்டி-ஆஞ்சியோஜெனிக் (Anti-angiogenic) பண்புகளைக் கொண்டுள்ளது.
  • வெள்ளைப் பூசணி சாறு புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க உதவும் என ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன. எனவே, உங்கள் வழக்கமான உணவில் வெள்ளை பூசணி சேர்த்துக்கொள்வது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.
  • பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
  • ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

பீர்க்கங்காய்:

கண் பார்வை மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

புடலங்காய்:

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வாழைக்காய்:

வாழைத்தண்டு:

வாழைப்பூ:

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.

கொத்தவரங்காய்:

  • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

பாகற்காய்:

  • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

காலிஃப்ளவர்:

  • ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உருளைக் கிழங்கு:

  • உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

 ப்ரக்கோலி:

  • புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது
  • எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  • சரும அழகை அதிகரிக்கிறது
  • மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  • முடியை பலப்படுத்துகிறது

 

சௌசௌ காய்:

  • இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பு செய்கிறது.

பீட்ரூட்:

  • இரத்த அழுத்தம் அதிகமாகாமல் பாதுகாப்பு செய்கிறது.

இஞசி:

  • செரிமானத்திற்கு உதவுகிறது.

 

காய்கறிகளில் உள்ள சத்துக்களும் அவற்றின் மூலம் உடலுக்கு ஏற்படும் பயன்களும்:

ஃபோலேட்:

புதிய இரத்த சிவப்பணுக்கள் உருவாக தேவைப் படுகிறது.

குழந்தைகளுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

மனச்சோர்வு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

செம்பு:

உடலின் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.

மனித குடலில் இரும்பு உறிஞ்சப்படும் தெற்கு தேவைப் படுகிறது.

மக்னீசியம்:

DNA – தொகுப்புக்கு தேவைப் படுகிறது.
ஆக்ஸிஜன் ஏற்றியாகச் செயல்படுகிறது.

துத்தநாகம்:

உடலின் செல் பிரிவிற்கும், உடலில் ஏற்படும் காயங்கள் குணமாகவும்,
நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கவும் பயன் படுகிறது.

செலினியம்:

செல்லில் ஆக்ஸிஜன் ஏற்ற சேதத்தை தடுக்க உதவுகிறது.

பொட்டாசியம்:

இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பு செய்ய உதவுகிறது.

வைட்டமின்கள் (ஏ,சி,இ,கே):

கண்பார்வை, சருமம்,பல்,ஈறு ஆகியவற்றை பாதிக்கிறது. காயம் ஆறவும், இரும்புச் சத்தை உறிஞ்சும் உதவுகிறது.

 

         நமது அன்றாட உணவில் பல்வேறு வகையான காய்கறிகளைச் சேர்ப்பது நமது ஒட்டுமொத்த
ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில்
ஒன்றாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது
முதல் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது வரை,
காய்கறிகளின் நன்மைகள் மறுக்க முடியாதவை. புதிய, வண்ணமயமான விருப்பங்களைத்
தேர்ந்தெடுப்பதன் மூலம், நீண்டகால ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் முக்கிய
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நம் உடலை வளர்க்க முடியும்.
எனவே, நீங்கள் எடையைக் குறைக்க விரும்பினாலும், ஆற்றலை அதிகரிக்க
விரும்பினாலும் அல்லது உங்கள் உணவை மேம்படுத்த விரும்பினாலும், காய்கறிகளை
உங்கள் உணவின் மையப் பகுதியாக ஆக்குங்கள். தேர்வு செய்ய எண்ணற்ற வகைகள்
இருப்பதால், எப்போதும் புதிதாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும், இது
ஆரோக்கியமான உணவை சுவாரஸ்யமாகவும் பலனளிப்பதாகவும் ஆக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *